ஏசி வெடித்ததில் பள்ளி தலைமை ஆசிரியை பரிதாப பலி

Webdunia
ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (15:33 IST)
கிருஷ்ணகிரி அருகே ஏசி வெடித்ததில் பள்ளி தலைமை ஆசிரியை பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி சாந்தி நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவரது மனைவி அஞ்சலா மேரி. ஆல்பர்ட் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். அஞ்சலா மேரி அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.  
 
ஆல்பர்ட்டும், அஞ்சலா மேரியும் நேற்றிரவு வீட்டில் ஏசி போட்டு தூங்கினர். இன்று காலை ஆல்பர்ட் நடைபயிற்சிக்கு சென்ற நிலையில் அவரது மனைவி அஞ்சலாமேரி வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். ஆல்பர்ட் சென்ற சற்று நேரத்தில் ஏசி வெடித்து, கரும்புகை வெளியானது. இதனால் அஞ்சலா மேரி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டிற்கு வந்த ஆல்பர்ட், மனைவி உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அஞ்சலா மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்