காதல் தோல்வியால் தற்கொலை நடக்கிறது… அதுக்காக காதலை தடை பண்ணமுடியுமா? ஹெச் ராஜா அடடே கேள்வி!

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (11:03 IST)
நீட் தேர்வு பயத்தால் பலரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் அதற்கு எதிராக ஹெச் ராஜா பேசியுள்ளார்.

நீட் எனும் மருத்துவ நுழைவுத்தேர்வால் பல கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவும் பலியாகி வருகிறது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தினாலும், மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாணவர்களின் உயிர் பலியாகியுள்ளது.

சமீபத்தில் அரியலூர் மாவட்டம் எலந்தகுழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று துர்கா தேவி மற்றும் ஆதித்யா என்ற இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று நீட் தேர்வு நடக்கிறது. இந்நிலையில் நிட் தேர்வுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா ‘ஆண்டுதோறும் பிளஸ் டு தேர்வு முடிவுகள் தோல்வியால் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதே போல காதல் தோல்வியாலும் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதற்காக காதலை தடை செய்ய சட்டம் போட முடியுமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்