தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் 3 பேர் தற்கொலை !!

சனி, 12 செப்டம்பர் 2020 (22:16 IST)
இன்று ஒரேநாளில் தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.

சமீபத்தில் அரியலூர் மாவட்டம் எலந்தகுழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். அதனால் இந்த ஆண்டு மிகுந்த பயத்துடனே படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று படித்துக் கொண்டிருந்த போது தனது அறையிலேயே தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள அனைவரையும் பாதித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.


இந்த நிலையில் நீட் தேர்வு அச்சம் காணமாக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த்க ஆதித்யா என்ற மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சோகம் ஆறுவதற்குள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதில் வசித்து வந்த மோதிலால் என்ற மாணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து சம்பவம் பெரும் மாநிலத்தையே உலுக்கி எடுத்துள்ளது.#neetexam #india #tamilnadu #mothilal #adhithya #jothi #justice

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்