நீதிமன்றத்தை அவதூறாக பேசிய விவகாரம்! – எச்.ராஜா முன் ஜாமீன் ரத்து!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (15:13 IST)
நீதிமன்றம் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் பாஜக பிரமுகர் எச்.ராஜா மீது வழக்கு உள்ள நிலையில் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகள் முன்னர் பாஜக பிரமுகர் எச்.ராஜா பொதுவெளியில் நீதிமன்றம் குறித்து இழிவாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அதை தொடர்ந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் முன் ஜாமீன் கேட்டு எச்.ராஜா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய கிளை உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் அங்கு ஆஜராகும்படி எச்.ராஜாவுக்கு உத்தரவிட்டதுடன், எச்.ராஜாவின் முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்