சோப்பின் மீது கால் வைத்த வேகத்தில் வழுக்கி மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழப் போனார். இதைக் கண்டு துரிதமாக செயல்பட்ட அவரது கணவர் ஓடிச் சென்று ரூபாயின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டார். இருப்பினும், சில விநாடிகளே அவரால் தனது மனைவியை தாங்கிக் கொள்ள முடிந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் இந்த பெண், அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் மீது விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட கணவர், ஆட்டோ மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.