கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

Siva

ஞாயிறு, 23 ஜூன் 2024 (08:01 IST)
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில், சிவகுமார் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்த சிவகுமாரை இன்று காலை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவகுமாரை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
 
கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முன்னதாக கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், சின்னதுரை உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா என்பவரை சிபிசிஐடி காவல்துறை கைது செய்துள்ளது. புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி விநியோகம் செய்தவர் ஜோசப் ராஜா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்