கோவிலை முடிவிட்டதால் பூசாரிகளுக்கும் நிதியுதவி தர வேண்டும் – எச்.ராஜா

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (08:27 IST)
ஊரடங்கு உத்தரவால் கோவில்களை மூடியுள்ள நிலையில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு உதவித்தொகை வழங்க எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி 21 நாட்கள் முழு ஊரடங்கு செயல்பட அறிவுறுத்தியுள்ளதால் தமிழகத்தில் மார்ச் 31 வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவில்கள் மூடப்பட்டுள்ளது குறித்து பதிவிட்டுள்ள எச்.ராஜா “தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள், ஓதுவார், இசை கலைஞர்கள், ஆகியோருக்கு மாதம் 10000 ரூபாய் வரும் 3 மாதங்களுக்கு அறநிலையத்துறை வழங்கிட வேண்டும். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட வேண்டும்.” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்