தொழிலாளர்கள், மாணவர்களை வெளியேற்றக்கூறுவோர் மீது நடவடிக்கை ....தமிழக அரசு உத்தரவு !

ஞாயிறு, 29 மார்ச் 2020 (14:23 IST)
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநிலஅரசுகளுக்கு மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்டதேவைகளுக்கான ஏற்பாடுகளை நிறைவேற்ற தமிழக அரசு தற்போது அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மேலும்,  இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள், மாணவர்களை வெளியேற்றக்கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சமூக விலகலை கடைபிடிக்கவும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கவும் தான் மத்திய மாநில அரசுகள் இந்த நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்