மு.க.ஸ்டாலின் நல்லவர்.. திருமா, சீமான் தேச துரோகிகள்? – எச்.ராஜா ஆவேசம்!

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (15:13 IST)
இந்து மதம் குறித்த சமீபத்திய கால சர்ச்சைகள் குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் இந்து மதம் குறித்த கருத்துகள், இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன.
தற்போது சமீபமாக ராஜராஜ சோழன் இந்து மன்னரில்லை என்று வெற்றிமாறன் பேசியதற்கு திருமாவளவன், சீமான், கருணாஸ் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து பேசியிருந்தனர்.

இந்த தொடர் சர்ச்சை சம்பவங்கள் குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா “திருமாவளவன், சீமான் இருவரும் தேசத்துரோகிகள். முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஆனால் ஸ்டாலினுடன் இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள். விசிக, நாதக கட்சிகளை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என பேசியுள்ளார்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்