இளையராஜாவின் ஐயர் வேடம்: பாரதிராஜா விமர்சனத்துக்கு எச்.ராஜா பதிலடி!

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (12:48 IST)
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா ஐயராக மாற நினைப்பதாக பிரபல இயக்குனர் பாரதிராஜா நேற்று விமர்சித்திருந்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
 
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம விபூஷன் விருது அறிவித்தது. இதனையடுத்து ஆங்கில பத்திரிக்கை ஒன்று அவர் தலித் என்பதாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது போல செய்தி வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிய அந்த பத்திரிக்கை மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்தது.
 
இந்நிலையில் இதுகுறித்து தேனியில் நேற்று பேசிய இயக்குனர் பாரதிராஜா, இளையராஜா ஐயராக மாற நினைப்பதால்தான் ஆங்கில பத்திரிக்கை அவருடைய ஜாதியை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக இளையராஜாவை விமர்சித்திருந்தார்.

 
பாரதிராஜாவின் இந்த விமர்சனத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஐயர் என்றால் ஆசிரியர், மேன்மை கொண்டோர் என்று தான் பொருள். ஆகவே இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்கனவே ஐயர் தான். அவர் புதிதாக முயற்சிப்பதாக கூறுவது புரிதல் இன்மையே என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்