உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் எதிரொலி: இன்று மாலை கவர்னர் - முதல்வர் சந்திப்பு..!

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (12:31 IST)
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து சில விஷயங்களை பேச வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் இன்று கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்பாக இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் தமிழக முதல் அமைச்சர் சந்தித்து பேசி முடிவு எட்ட வேண்டும் என ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் இன்று மாலை இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் இந்த சந்திப்புக்கு பின் சில முக்கிய  முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்