ஜனவரி 15ஆம் தேதி இறைச்சி கடைகளை மூட வேண்டும்: அரசின் அதிரடி உத்தரவு..!

Siva
திங்கள், 13 ஜனவரி 2025 (18:01 IST)
பொங்கலுக்கு மறுநாள், அதாவது ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால், அன்றைய தினம் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, ஜனவரி 15 ஆம் தேதி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இறைச்சி கூடங்களை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சி  கூடங்கள் மூட வேண்டும் என்று அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த உத்தரவின் அடிப்படையில் இறைச்சி கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்,  திருவள்ளுவர் தினம், வள்ளலார் பிறந்த தினம் உள்பட சில தினங்களில் இறைச்சி கடைகள் மூடப்படுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்