கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டு, அதற்கான உத்தரவும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டக் குழுவின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் அமைச்சர் என்ற முறையில், அவர் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், துணைத் தலைவராக இருந்த ஜெயரஞ்சன் செயல் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக தலைமைச் செயலாளர் நா முருகானந்தம் அலுவல் சாரா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு முழு நேர உறுப்பினர்கள் மற்றும் ஏழு பகுதி நேர உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.