சுவிட்சர்லாந்து நாட்டில் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வர இருப்பதாகவும், இந்த தடையை மீறுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் புர்கா கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்விட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், புர்காவுக்கு தடை என்ற உத்தரவு கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பொதுவெளியில் வரும் பெண்கள் முகத்தை மறைக்கும் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதலங்கள் மற்றும் புனித தலங்களில் மட்டும் இந்த உத்தரவு பொருந்தாது.
ஆனால், அதே நேரத்தில் மத ரீதியாக, தட்பவெட்ப நிலை காரணமாக புர்கா அணியக்கூடாது. இந்த தடையை மீறினால் பத்தாயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்த மறுத்தால், அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரை செலுத்த நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.