மகளிருக்கு வழங்கப்படும் உரிமைப்பணம் மீண்டும் கஜானாவிற்கு சென்று விடுகிறது: ஜிகே வாசன்

Siva
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (15:26 IST)
மகளிருக்கு காலையில் வழங்கும் ரூபாய் ஆயிரம் உரிமை பணம் மாலையில் மீண்டும் தமிழ்நாடு அரசின் கஜானாவிற்கு சென்று விடுகிறது என தமிழ் மாநில கட்சியின் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார். 
 
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தென்காசியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜான்பாண்டியினை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அவர் பிரச்சாரத்தில் ’தமிழக அரசு மகளிர்க்கு ஆயிரம் ரூபாய்க்கு வழங்கும் உரிமை தொகை மீண்டும் இரவு டாஸ்மாக் மூலம் தமிழ்நாடு அரசின் கஜானாவுக்கு சென்று விடுகிறது என்றும் இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றும் தெரிவித்தார் 
 
பொய் வாக்குறுதிகளை அளித்ததால் மக்களை ஏமாற்றி தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்றும் தமிழக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார் 
 
தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதல் காப்பு தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது மக்களுக்கு வேதனையை அளித்துள்ளது என்றும் மத்திய அரசு சாதனை படைத்திருக்கிறது என்றால் திமுக அரசு மக்களுக்கு வேதனையை வழங்குவதில் சாதனை படைத்துள்ளது என்றும் அவர் கூறினார் 
 
தென்காசியில் இருந்து ஜான் பாண்டியனை நீங்கள் வெற்றி பெற்று மக்களவைக்கு அனுப்பினால் தென்காசி தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்வார் என்றும் ஜி கே வாசன் பேசினார். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்