ஆசையாய் வளர்த்த ஆட்டை பலி கொடுக்க திட்டம்! – ஆட்சியருக்கு கடிதம் அனுப்பிய சிறுமி!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (15:54 IST)
செங்கல்பட்டில் ஆசையாய் வளர்த்த ஆடு பலி கொடுக்கப்படுவதை தடுக்க சிறுமி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பிய சம்பவம் வைரலாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கருநிலம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஆடு ஒன்றை பாசமாக வளர்த்து வந்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக அந்த ஆடை அவர் வளர்த்து வந்த நிலையில் அவரது குடும்பத்தார் அந்த ஆட்டை பலி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

சிறுமி தடுத்தும் அவர்கள் கேட்காத சூழலில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ள சிறுமி தனது ஆட்டை காப்பாற்றி தர கோரியுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பலி கொடுப்பதை தடுத்ததுடன் சிறுமியையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்