பறவை காய்ச்சல் எதிரொலி; சரியும் முட்டை விலை! – இன்றைய மார்க்கெட் நிலவரம்!
வியாழன், 29 ஜூலை 2021 (11:34 IST)
கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்துள்ளதன் விளைவாக தமிழகத்தில் முட்டை விலை சரிவை சந்தித்துள்ளது.
கேரளாவில் பல இடங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க கேரள – தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் பறவை காய்ச்சல் எதிரொலியாக முட்டை விலை சரிய தொடங்கியுள்ளது. இதுவரை மார்க்கெட் நிலவரப்படி ரூ.5 க்கு விற்பனை ஆகி வந்த முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா குறைந்து ரூ.4.80 க்கு விற்பனையாகி வருகிறது.