சென்னையில் நான்கு மடங்கு உயர்ந்துள்ள காற்று மாசு! – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

வியாழன், 29 ஜூலை 2021 (09:37 IST)
இந்திய தலைநகர் டெல்லி தொடர்ந்து காற்று மாசுபாட்டை சந்தித்து வரும் நிலையில் தமிழக தலைநகர் சென்னையிலும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் வாகன இயக்கத்திற்கு அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2019ல் சென்னையிலும் அதிக இடங்களில் காற்று மாசுபாடு நிலவுவதாக செய்திகள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் சென்னையில் வழக்கத்தை விட காற்று மாசு 4 மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பிற மாவட்டங்களை விட காற்று மாசு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்