ரயில் முன் தள்ளி மாணவி கொலை: பரங்கிமலையில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (16:03 IST)
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை.


சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23) என்பவர் அதே பகுதியைச் கல்லூரி மாணவி சத்யா (20) என்பவரை காதலித்துள்ளார்.

இவர்கள் இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்த போது திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு சதீஷ் சத்யாவை ரயில் முன்பு சதிஷ் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.  ரயிலில் சிக்கி சத்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாணவியின்  உடலை மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய இளைஞர் சதீஷை பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

ஆம், சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்றவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீஸ் சார்பாக 4 தனிப்படைகளும் பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்படுள்ளது.
 
Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்