தூத்துக்குடி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை…

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (15:52 IST)
தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் அருகே கல்வலையில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில்  7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காட்டுப்பகுதியில் கிடந்த சிறுமியின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் அங்கு தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக விசாரணையில் தகவல் வெளியாகிறது.

இதனையடுத்து, மாணிக்கபுரத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் திருச்சியில்  ஒரு சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கபட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சிகு ஆளாக்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்