5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (15:50 IST)
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டுமுதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதியை மத்திய அரசு கொண்டு வந்தது.  இதற்கு தமிழக அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இதனையடுத்து தமிழகத்தை ஆளும் எடப்பாடி தலைமையிலான  அதிமுக  அரசானது மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணியை நேற்று உறுதி செய்ததை அடுத்து இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது, அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்