1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (07:51 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகிறது
 
19 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வகுப்பறைகளில் கிருமிநாசினி கண்கவர் அலங்காரங்களுடன் மாணவர்களை வரவேற்க பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் இன்று பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் சிறப்பாக வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இன்று பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் அனைவரும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்