ஸ்டெர்லைட் கலவரம் - தூத்துக்குடி மருத்துவமனையில் இலவச சட்ட உதவி மையம்

Webdunia
சனி, 26 மே 2018 (12:17 IST)
மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசின் நிதியுதவியைப் பெற்றுத் தர மாவட்டச் சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் அரசு மருத்துவமனையில் இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்