அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல்!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (16:02 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது வாகனத்தில் திண்டுக்கல் மாவட்டம் நாகம்பட்டி என்ற பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவருடைய காரை நோக்கி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர் 
 
4 காரில் வந்த மர்ம நபர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  காரின் கண்ணாடியை உடைத்து காரையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் மர்ம நபர்கள் மாயமாகி விட்டனர்
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரை தாக்கியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
கரூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் தொடர்பான விவகாரத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என தகவல் கூறுகின்ற்னா.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்