ஒழுங்கா காட்டுக்குள்ள போ.. இல்லைனா! – காட்டுயானையை பேசியே திருப்பியனுப்பிய ஊழியர்!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (11:32 IST)
தமிழகத்தில் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் ஊருக்குள் புகுந்துவிடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் காட்டுயானை ஒன்றை ஒருவர் பேசியே திருப்பியனுப்பிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தின் கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதிகளில் காட்டு யானைகள் சாலைகளில் நடமாடுவதும், மக்கள் வாழும் பகுதிகளில் நுழைவதும் அதிகரித்து வருகிறது. அவற்றை விரட்டியடிக்க மக்களும், வனத்துறையினரும் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவ்வாறாக சமீபத்தில் மக்கள் வாழும் பகுதியில் நுழைந்த யானை ஒன்றை வன ஊழியர் ஒருவர் பேசியே திருப்பி அனுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்