ஓபிஎஸ் காரை சோதனை செய்த பறக்கும் படை.. பர்ஸை கூட திறந்து காட்டிய ஓபிஎஸ்..!

Mahendran
வியாழன், 4 ஏப்ரல் 2024 (15:23 IST)
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையம் பறக்கும் படையை வைத்து வாகனங்களை சோதனை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக தமிழகத்தை ஆளும் திமுக பிரமுகர்களின் வாகனங்கள் கூட சோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ராமநாதபுரம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ஓபிஎஸ் காரிலும் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. 
 
இன்று ஓபிஎஸ் தனது காரில் பிரச்சாரத்திற்காக சென்று கொண்டிருந்தபோது காரை வழிமறித்த பறக்கும் படையினர் அவரது காரை தீவிரமாக சோதனை செய்ததாகவும் அந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஓபிஎஸ் தனது பர்ஸை கூட திறந்து காட்டியதாகவும் அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை பறக்கும் படையினர் சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் பணம் தங்கம் உள்ளிட்ட எந்த பொருள்களும் ஓபிஎஸ் காரில் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் பறக்கும் படையினர் அவரது காரை செல்ல அனுமதி தென்னர் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்