தமிழகத்தில் 4 நாட்கள் பிரதமர் மோடி பிரச்சாரம்.. எந்தெந்த தொகுதிக்கு செல்கிறார்? முழு விவரங்கள்..!

Mahendran

புதன், 3 ஏப்ரல் 2024 (11:45 IST)
தமிழகத்தில் 4 நாட்கள் பிரச்சாரம் பிரதமர் மோடி மேற்கொள்கிறார்  என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் தேசிய தலைவர்களும் தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 4 நாட்கள் தமிழகத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் முழு விவரங்கள் குறித்த தகவல் ஏதோ

ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வாகன பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஏப்ரல் 9ம் தேதி காலை வேலூரில் வாகன பேரணி, மாலை தென்சென்னையில் வாகன பேரணியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ஏப்ரல் 10ம் தேதி நீலகிரியில் வாகன பேரணியும், கோவையில் பொதுகூட்டத்திலும் பங்கேற்கிறார்

அதன்பின்னர் மீண்டும் ஏப்ரல் 13ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பின்னர் ஏப்ரல் 14ம் தேதி விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என தமிழக பாஜக அறிவித்துள்ளது,

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்