பொதுக் கழிப்பிடங்களில் பாலூட்டும் வசதி ! மாநகராட்சி ஆணையர் தகவல் !

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (16:14 IST)
சென்னை மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை தி. நகர் பனகல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள  மாதிரி கழிவறைகளை ஆய்வு செய்த , சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
சென்னை மாநகராட்சியில் 1245 இடங்களில் உள்ளா கழிப்பிடங்களை மாநகராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
 
கார்பரேட் நிறுவனங்கள், வங்கிகள்  சேவை நிறுவங்கள் மூலம் பொதுமக்களுக்கு சுத்தமாக இருப்பது குறித்த விழிப்புணர்வு நடத்தியுள்ளோம்.

மேலும், சென்னை மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்