இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

Mahendran

புதன், 19 மார்ச் 2025 (18:51 IST)
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற கேம் டெவலப்பர்கள் மாநாட்டில், ஆன்லைன் கேமிங் துறையின் வளர்ச்சி குறித்து புதிய அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை படி, 2024ஆம் ஆண்டில் இந்திய ஆன்லைன் கேமிங் துறையின் வருவாய் ரூ. 32,000 கோடி என்ற அளவைக் கடந்துள்ளதாகவும், வரும் 2029ஆம் ஆண்டுக்குள் ரூ. 78,000 கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  
 
59 கோடி இந்தியர்கள் ஆன்லைன் கேமர் எனவும், 1100 கோடி கேமிங் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும், உலகின் 20% கேமர்கள் இந்தியாவில் உள்ளனர் என்றும், 1900 கேமிங் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்தியாவில் ஆன்லைன் கேம் காரணமாக 1.3 லட்சம் நிபுணர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும், அந்நிய நேரடி முதலீடு ரூ. 26,000 கோடி செய்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது
 
மேலும் உண்மையான பணம் செலுத்தி விளையாடும் கேம்கள் தற்போது 85.7% ஆக உள்ளதாகவும், இது 2029க்குள் இது 80% ஆக குறைந்தாலும்,  இலவச கேம்கள் 14.3% முதல் 20% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்