சென்னை மெட்ரோ ரயிலில் ஏசி, அடுத்த நிறுத்தம் குறித்த ஒலிபெருக்கி அறிவிப்பு, அவசர தேவைக்கு ரயிலை நிறுத்தும் வசதி ஆகியவை உள்ள நிலையில் இந்த வசதிகளுடன் கூடிய பேருந்தூகள் விரைவில் சென்னை மாநகரில் இயங்கவுள்ளது
இந்த ஏசி பேருந்தில் 40 பயணிகள் அமர்ந்த நிலையிலும் 20 பயணிகள் நின்ற நிலையிலும் பயணம் செய்யலாம். நவீன முறையிலும், நல்ல தரத்திலும், அதிக இட வசதியுடனும் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகள் சென்னை மக்களின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது