கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமான ஏழை எளிய மக்கள் வறுமை காரணமாக கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒருவர் தனது மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை இருந்தது
ஸ்ரீபெரும்புதூர் ஊரை சேர்ந்தவர் ஆறுமுகம், கூலி தொழிலாளியான இவர் அந்த பகுதியில் சாமியாடியாகவும் இருந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவர் வறுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது
இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டாதால் ஆறுமுகத்தின் மனைவி வேலைக்கு சென்றிருந்த நிலையில் திடீரென மனமுடைந்த ஆறுமுகம், தனது 12 வயது மகள் ராஜேஸ்வரி, 10 வயது மகள் ஷாலினி மற்றும் 8 வயது மகன் சேதுராமன் ஆகிய மூவரையும் கொன்றுவிட்டு, அவரும் அருகில் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அவரது மனைவி தனது குழந்தைகளும் கணவனும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நான்கு பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
இந்த தற்கொலை மற்றும் கொலை சம்பவம் குறித்து முதல் கட்ட விசாரணையில் வறுமை காரணமாக ஆறுமுகம் தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த முழு விசாரணைக்கு பின்னரே தற்கொலை மற்றும் கொலைகளுக்கு காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்