கொரோனா பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட பொது ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை இருந்த நிலையில், நேற்று மாலை நான்காவது கட்ட பொது ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா பாதிப்புகள் இல்லாத மாவட்டங்கள், சில பகுதிகளில் மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ஹிந்தி தொலைக்காட்சி நடிகர் மன்மீத் கரவேல் மும்பையில் தங்கி ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். ஆதத் சே மஜ்பூர் , குல்தீபக் போன்றவை இர் நடித்துள்ள தொடர்களாகும்.
நடிகர் மன்மீத்துக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவீந்த கவுர் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவர் இருவரும் மும்பையில் உள்ள கார்கார் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் மன்மீத் க்ரேவல் தன மனைவியிடம் தனது எதிர்காலம் குறித்து மிகுந்த வருத்ததுடன் பேசிவிட்டு, படுக்கைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவரது சப்தம் கேட்டு விழித்த மனைவி தன கணவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், அருகில் உள்ளவர்களின் துணையுடன் மன்மீத்தை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மன்மீத்-ன் மனைவி போலீஸாரிடம் இதுகுறித்து கூறியுள்ளதாவது : கொரோனா பாதிப்பால் அவர் நடித்துள்ள நாடகங்களை வெளியாகததால் அவருக்கு சம்பளம் கிடைக்காததால் வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமலும் மிகுந்த மன அழுத்ததில் இருந்துள்ளார். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற முடிவு செய்தார். அது கொரோனா பாதிப்பால் முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் தொல்லை செய்ய ஆரம்பித்ததால் இந்த முடிவுக்கு வந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சின்னத்திரை நட்சத்திரங்கள் மன்மீத்தின் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய முன்வந்துள்ளனர்.