மகளுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை - ஜல்லிக்கட்டுக்கு தீவிரமாகும் போராட்டம்

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2017 (16:10 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆற்காட்டில் மகளுடன் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்ட உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

மெரினாவில் இன்று நான்காவது 6ஆவது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உலக அளவில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

வேலூர் மாவட்டம் ஆற்காடு நகரில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சதீஷ் என்ற இளைஞர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷமிட்டபடி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றினார்.

பிறகு, தனது மகள் மிருதுளா மீதும் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த கட்டுரையில்