தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை… இன்று தாக்கல் ஆகும் மசோதா!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:25 IST)
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழக அரசு நவம்பர் மாதம் சட்டம் கொண்டு வந்தது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் ஆன்லைன் சூதாட்ட மோகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலிகள், வலைதளங்களை தடை செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் விதமாக நவம்பர் மாதம் சட்டமியற்றப்பட்டது. இன்று கூடவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அந்த தடை மசோதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்ய உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்