கருஞ்சீரகத்தை நல்லெண்ணெய்யில் அரைத்து, சரும நோய்களான கரப்பான், சிரங்கு, இவற்றுக்கு பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். சினைப்பு, கட்டிகள் கொப்பளங்கள் - இவற்றுக்கும் நல்ல மருந்து. கருஞ்சீரகத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியாக்களை அழிக்கும்.
லேசான ஜூரங்களுக்கு நல்ல மருந்து. தலைவலி, கீல் வீக்கம் இவற்றுக்கு விதைகளை வெந்நீரில் இட்டு அரைத்து பூசலாம். இதன் பொடியை தேன் (அ) நீரில் கரைத்துக் கொடுக்க மூச்சு முட்டல் நீங்கும். மோரில் சேர்த்து கொடுத்தால் விக்கல் நிற்கும்.
குடல் புழுக்களையும் கருஞ்சீரகம் நீக்கும். உணவுக்கு பயனாகும் எண்ணெய்களின் தயாரிப்பில் கருஞ்சீரகம் எண்ணெய் ஒரு நிலை நிறுத்தும் பொருளாக பயனாகிறது. பட்டு, கம்பளி ஆடைகளின் மடிப்புகளில் கருஞ்சீரகம் விதைகளை போட்டு வைத்தால் பூச்சிகள் தாக்காது.