வாக்கிங் போன நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. செந்தில் பாலாஜி பேட்டி..!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (11:03 IST)
நான் வாக்கிங் சென்ற நேரத்தில் அதிகாரிகள் சோதனை செய்வதாக தனக்கு தகவல் வந்ததாகவும் இதனை அடுத்து வாக்கிங் செல்வதை நிறுத்திவிட்டு வீடு திரும்பி கொண்டிருப்பதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் இன்று காலை திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் தன்னுடைய வீட்டின் முன் பேட்டி அளித்த செந்தில் பாலாஜி நான் வாக்கிங் சென்றிருந்தபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியானது என்றும் இதனை அடுத்து வாக்கிங் செல்வதை நிறுத்திவிட்டு வீடு திரும்பியிருக்கின்றேன் என்றும் தெரிவித்தார். 
 
அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும் ஏற்கனவே வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
என்ன நோக்கத்தோடு அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்திருக்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு அதன் பிறகு மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறேன் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்