சென்னையில் நகைக்கடை ஓனர்கள் கைது.. பூட்டை உடைத்து சோதனை செய்ததால் பரபரப்பு..!

ஞாயிறு, 11 ஜூன் 2023 (08:24 IST)
சென்னையில் பொது மக்களை ஏமாற்றி பண மோசடி செய்த நகைக்கடை ஓனர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ததோடு பூட்டை உடைத்து நகைக்கடையில் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை நொளம்பூரில் உள்ள ஏஆர்டி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை ஆல்வின் மற்றும் ராபின் சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இந்த நகைக்கடையில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி அந்த பகுதி பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. 
 
இந்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு திடீரென பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக நகைக்கடையில் பூட்டை உடைத்து சோதனை செய்தனர். சுமார் 8 மணி நேர சோதனைக்கு பிறகு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதோடு நகைக்கடை உரிமையாளர்களான ஆல்வின் மற்றும் ராபின் ஆகிய சகோதரர்களை கைது செய்தனர் 
 
இது குறித்த தகவல் அறிந்து பணத்தை கொடுத்து ஏமாந்த முதலீட்டாளர்கள் அந்த பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்