சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டது.. பயணிகளுக்கு பாதிப்பா?

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2023 (11:28 IST)
சென்னை மின்சார மின்சார ரயில் திடீர்னு தடம் புரண்டதை அடுத்து பயணிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளுவர் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலின் ஒரு பேட்டி பேசின்பிரிட்ஜ் அருகே திடீர் என தடம் புரண்டது. 
 
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தடம் புரண்ட ரயில் பெட்டியை சரி செய்யும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 
 
மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வே போலீசார் உத்தரவிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தை அடுத்து சென்னையில் ரயில் தடம் புரண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்