சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் இலவச சமையல் நிகழ்ச்சி!

சனி, 10 ஜூன் 2023 (17:23 IST)
சமையல் பிரியர்களுக்காக இலவச சமையல் நிகழ்ச்சி சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் பிரபல சமையல் கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் நடத்தினார்.
 
இதில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு சமையல் நுட்பங்கள் குறித்து கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் ஏராளமான பார்வையாளர்கள் நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர். 
 
வார இறுதி நாளை மகிழ்ச்சியாகவும் ருசியாகவும் கொண்டாடும் வகையில்,  மிகச்சிறந்த உணவுகளின் அற்புதமான கலவையைக் சென்னை நகர மக்களுக்கு வழங்கும் விதமாக சென்னையில் உள்ள பிரீமியம் மால்களில் ஒன்றான பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில், பிரபல சமையல்கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் தலைமையில் சமையல் பயிற்சி நிகழ்ச்சி இன்று  மாலை 4  மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்