கிருஷ்ணகிரி சம்பவத்தின் எதிரொலி: தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை

Siva
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (12:08 IST)
தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும் , மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும் என கிருஷ்ணகிரி சம்பவத்தின் எதிரொலியாக தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெற்றோர் அனுமதியின்றி முகாம் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது என்றும் தனியார் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த முகாம்களாக இருந்தாலும் மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலம், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலம் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கு நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 2ஆம் தேதி வரை சிவராமனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் நீதிபதி உத்தரவை தொடர்ந்து சிவராமனை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்