கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் -அமைச்சர் கே. என். நேரு தொடங்கி வைத்தார்!

J.Durai

செவ்வாய், 11 ஜூன் 2024 (13:45 IST)
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருவாசி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாமினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு  தொடங்கி  வைத்தார்.
 
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ. கதிரவன், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஸ்ரீதர், மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை மரு.கணபதி மாறன், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் மருத்துவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்