வெளியுறவுத்துறைக்கும் மத்திய அரசுக்கும் கடிதங்களை பறக்க விடும் எடப்பாடியார்!!!

Webdunia
சனி, 11 ஜூலை 2020 (10:13 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியுறவுத்துறைக்கும் மத்திய அரசுக்கும் கடிதங்களை எழுதியுள்ளார். 
 
ஆம், கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல் உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும், செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமெனவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து ஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்