மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்

புதன், 1 ஜூலை 2020 (20:48 IST)
மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்
கோலிவுட் திரையுலகில் ஆக்சன் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் சகோதரர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மரணம் அடைந்துவிட்டதாக வெளிவந்த செய்திகள் கன்னட திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. 
 
39 வயதான சிரஞ்சீவி சார்ஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனால் அவர் மருத்துவர்களின் சிகிச்சைக்கு முன்னரே மரணமடைந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
 
நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில் தற்போது அவரது திரைப்படங்களில் ஒன்றான ’ஆத்யா’ என்ற கன்னடப்படம் நாளை மறுநாள் அதாவது ஜூலை 3ஆம் தேதி சன்நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்