உருமாறிய கொரோனா: தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன்??

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (10:19 IST)
வரும் 28 ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 
 
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு கிட்டத்தட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தியில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
புது கொரோனா வைரஸ் முன்பு இருந்த வைரஸ் வகையை விடவும் 70% வேகமாக பரவக்கூடியது என நம்பப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் 60% தொற்று, இந்த வகை வைரஸால் ஏற்பட்டிருக்க கூடும்.  
 
லண்டன் மற்றும் தென் கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் இவ்வகை தொற்று அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், உருமாறிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28 ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 
 
கடந்த முறை போடப்பட்ட கொரோனா பொதுமுடக்கம் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவதால் கட்டுப்பாட்டை அதிகரிக்கலாமா என ஆலோசிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்