பொது முடக்கம் நீட்டிப்பா? முதல்வர் தீவிர ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (11:51 IST)
பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை. 
 
நேற்று தமிழகத்தில் 805 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது.  
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 805 பேர்களில் சென்னையில் மட்டும் 549 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால்  சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், தமிழகத்தில் மே 31 ஆம் தேதி பொதுமுடக்கம் முடிவடையும் நிலையில் தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை. 
 
கடந்த முறை ஆலோசனையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட வேண்டாம். அதிகளவில் பரிசோதனை செய்வதால்தான் அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது. மக்கள் பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.  
 
கடந்த இரு முறையும் மருத்துவர்களின் பந்துரையை ஏற்று ஊரடங்கு தமிழகத்தில் நீடிக்கப்பட்டது. ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் பொதுமுடக்கத்தை உடனே முழுவதும் நீக்காமல் படிப்படியாகவே தளர்த்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். 
 
இந்த முறை என்ன தெரிவிப்பார்கள், முதல்வர் என்ன முடிவெடுப்பார் என பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்