இதை கொண்டு வந்ததே காங்கிரஸ் – திமுகதான்! – எடப்பாடியார் பளீர்!

Webdunia
சனி, 28 டிசம்பர் 2019 (12:13 IST)
மக்கள் தொகை கணக்கெடுப்பை கொண்டு வந்த காங்கிரஸ்-திமுகவே தற்போது மக்களை ஏமாற்றுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழிவதும் குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி போன்றவற்றால் மக்களிடையே போராட்டங்களும், குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. மத்திய அமைச்சர்கள் பலர் இதுகுறித்து விரிவான விளக்கங்களை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”தமிழக அரசின் நிர்வாகத்தை பாராட்டி மத்திய அரசு முதல் இடம் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பாடுபட்ட அனைத்து அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி. இந்த முதல் இடம் மத்திய அரசே கொடுத்தது. யாரும் சிபாரிசு செய்து வாங்கவில்லை. திமுக தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பேசிய அவர் ”மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தை கொண்டு வந்ததே காங்கிரஸ் – திமுகதான். ஆனால் தற்போது அதற்கு எதிராக போராடுவதாக செல்வாக்கு அற்ற எதிர்கட்சிகள் மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி சூழ்ச்சி செய்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்