ப்ளாக் மனி டான்: வருமான வரித்துறை கிடுக்கு பிடியில் முகேஷ் அம்பானி?

Webdunia
சனி, 28 டிசம்பர் 2019 (11:45 IST)
முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டப்படாத் வெளிநாட்டு சொத்து குறித்து வருமான வரித்துறை கிளறி வருகிறதாம். 
 
கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் அவரது 3 பிள்ளைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மிகவும் ரகசியமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், பணமோசடி தடுப்பு விவரங்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள 7 நாடுகளிடம், முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துகள் தொடர்பான விவரங்களை கேட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இந்த 7 நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, இங்கிலாந்து, மொரீஷியஸ், லக்சம்பர்க், செயின்ட் லூசியா ஆகிய நாடுகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்