கருணாநிதி போலவே நானும் முதல்வர் ஆனேன் - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (12:01 IST)
அண்ணாவின் மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வரானது போலவே நானும் முதல்வர் ஆகியுள்ளேன் என எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதேபோல திமுக தலைவர் ஸ்டாலினும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை ஊர்ந்து சென்று முதல்வர் ஆனவர் என விமர்சித்தார்.  
 
இதற்கு, கடலூர் மாவட்டம் புவனகிரியில் பேசிய அவர் “ஊர்ந்து சென்று முதல்வராக நான் என்ன பாம்பா? பல்லியா? நடந்து சென்றுதான் முதல்வர் ஆனேன் என முன்னர் கூறினார். இதனைத்தொடர்ந்து அண்ணாவின் மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வரானது போலவே ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி திமுகவினரை மேலும் தூண்டிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்