ஊர்ந்து செல்ல நான் என்ன பல்லியா? பாம்பா? முதலமைச்சர் காட்டம்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (17:07 IST)
ஊர்த்து போய் முதல்வர் பதவியை வாங்கியதாக வரும் விமர்சனங்களுக்கு பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி பதில். 

 
கடலூர் மாவட்டம் புவனகிரியில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நான் ஊர்த்து போய் முதல்வராக பல்லியா? பாம்பா? நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன். விவசாயிகள் கஷ்டத்தை நான் உணர்ந்தவன். 
 
வெயில், மழை, இரவு, பகல் என எதையும் பார்க்காமல் ரத்தம் வியர்வை சிந்தி உழைக்கும் ஒரே தொழில் விவசாயம். இதைப்பற்றி ஸ்டாலினுக்கு சிந்திக்க தெரியாது. சிந்தித்தாலும் பேசத் தெரியாது. என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் தான் செய்துகொண்டிருக்கிறோம் என மக்கள் மத்தியில் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்