சாயப்பட்டறை அதிபர்களின் பிடியில் மீண்டும் கரூர்!

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (18:39 IST)
ஏற்கனவே, ஆற்றில் சாயப்பட்டறை தண்ணீரை ஆற்றில் கலந்து விட்ட நிலையில், தற்போதே தடுப்பணையிலேயே சாயக்கழிவு நீரை கலந்து முற்றிலும் குடிநீர் மற்றும் விவசாய நீரை விஷ நீராக மாற்றியுள்ளனர் சாயப்பட்டறை அதிபர்கள்.
 
கரூரில் உள்ள செட்டிபாளையம் தடுப்பணையில் சாயக்கழிவு நீர் கலந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சாயக்கழிவு பாசனத்திற்கும் குடிநீருக்குமான நீரை நாசம் செய்ததால் ஊரை காலிசெய்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
 
கரூரை அடுத்த செட்டிபாளையம் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் அண்மையில் அமராவதி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் வந்து சேர்ந்தது. 
 
ஏற்கனவே சாயக்கழிவு நீரை, பற்றி கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தால், சாயப்பட்டறை உரிமையாளர்கள் அப்படியே சாயபட்டறை தண்ணீரை ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். 
 
இந்நிலையில், தற்போது, அந்த விஷ கழிவு நீரை இதே பகுதியில் உள்ள தடுப்பணையில் உள்ள நீரிலும் மர்ம நபர்கள் கலக்க விட்டுள்ளனர். இதனால் அணையில் உள்ள நீர் முழுவதும் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.
 
இச்சம்பவம் குறித்து அறிந்த கரூர் மாசுகட்டுபாட்டு அதிகாரிகள் செட்டிபாளையம் அணைக்கு வந்து அணையில் உள்ள நீரை சேகரித்து பரிசோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர். 
 
இந்த பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்குமா? கரூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டுமென்கின்றனர் நடுநிலையாளர்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்